சினிமா

இவ்ளோ வெளிப்படையா சொல்லிட்டாரே!! ஆதாரத்தோட நம்ம ரியோ செய்த வேலையை பார்த்தீங்களா!!

Summary:

rio tweet about bigboss

தமிழகத்தில் மிகவும் பிரமாண்டமாக விஜய் Tv சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த தொடர் தான் சரவணன் மீனாட்சி. இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மீனாட்சிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகர் ரியோ ராஜ்.

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த ரியோ நடிகர் ரியோ ராஜ் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நீங்கா இடத்தை பிடித்தார். 

rio raj க்கான பட முடிவு

இந்த தொடர் முடிந்து பல மாதங்கள் ஆனநிலையில் நடிகர் ரியோ ராஜ் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் களமிறங்கியுள்ளார். அவர் பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் ரியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில்  ஓட்டு போட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சித்தப்பு சரவணனுக்கே தன்னுடைய 50 ஓட்டுகளையும் போட்டுள்ளேன் என வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்கான ஆதாரத்தையும் அதில் இணைத்துள்ளார். 


Advertisement