மீண்டும் ஹீரோவாகும் நடிகர் கருணாஸ்! ஜோடி சேரும் பிரபல பிக்பாஸ் இளம் நடிகை! யார் தெரியுமா?

மீண்டும் ஹீரோவாகும் நடிகர் கருணாஸ்! ஜோடி சேரும் பிரபல பிக்பாஸ் இளம் நடிகை! யார் தெரியுமா?


ridvika-going-to-act-as-heroine-in-karunas-movie

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கருணாஸ். அவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அரசியலில் ஆர்வம் காட்டி வந்த கருணாஸ் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க களமிறங்கியுள்ளார். அம்பாசமுத்திரம் அம்பானி,  திருநாள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் ஆதார் என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் அவருடன் நடிகர் அருண்பாண்டியன், வத்திக்குச்சி திலீப், பிரபாகர், மனிஷா யாதவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Rithvika

மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா  இசையமைக்கிறார். வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்தில் கருணாஸ்க்கு ஜோடியாக பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளரான நடிகை ரித்விகா நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.