சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகும் தனுஷ் படநடிகை! இனி வேற லெவல்தான்..rejisha-vijayan-going-to-act-in-surya-movie

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தை பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த நிலையில் இப்படம் சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரி குவித்து சாதனை படைத்தது.

கர்ணன் படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகையான ரெஜிஷா விஜயன் நடித்திருந்தார். கிராமத்து கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து தனது முதல் படத்திலேயே அவர் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Karnan

அதாவது ரெஜிஷா விஜயன் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அவர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இவ்வாறு டாப் ஹீரோக்களின் படங்களில் இணையும் ரெஜிஷா விஜயன் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.