சினிமா

ஓய் படத்துல நடிச்ச நடிகையா இது! இவ்வளவு அழகா மாறிட்டாங்களே

Summary:

recent photos of oyee film heroine

தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஓய் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இஷா ரேபா. இவரது சமீபத்திய அழகான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

2016ம் ஆண்டு பிரான்சிஸ் மர்கஸ் என்ற இயக்குனரின் இயக்கத்தில் வெளியானது ஓய் திரைப்படம். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்தார். ஆனால் இந்தப் படம் சொல்லும் அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை ஏற்படுத்தவில்லை.

இந்த படத்தில் கதாநாயகியாக இஷா ரேபா நடித்தார். அதற்குப் பிறகு இவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. பின்னர் தெலுங்கு திரை உலகில் சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.

ஓய் படத்தில் மிகவும் எளிமையாக தோற்றமளித்த இஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த படத்தில் நடித்த நடிகை தானா இவர் என்று வாயை பிளக்கும் அளவிற்கு மாறியுள்ளார் இஷா.

 


Advertisement