சிம்பு நயன்தாரா பிரிவிற்கு காரணம் இதுதான்!. வெளியாகும் பகீர் தகவல்கள்!.



reason for simbu and nayanthara problem


நடிங்கர் சிம்புவை வைத்து கெட்டவன் என்ற படத்தை ஜி.டி.நந்து இயக்கினார். ஆனால் அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

அதுபற்றி இயக்குனர் கூறுகையில், கெட்டவன் படத்தை சிம்புவை வைத்து இயக்க திட்டமிட்டேன். ஆனால் இப்போது இதில் நடிக்க முடியாது என சிம்பு கூறியதால், அடுத்ததாக நடிகர் தனுஷை அணுகலாம் என முடிவெடுத்தேன். 

இதனையடுத்து சிம்பு நாமே இந்த படத்தை  பண்ணலாம் என மறுபடியும் கூறினார். நானும் ஓகே என கூறினார். ஆனால் தனுஷிடம் நான் கதை சொன்னதாகக் நினைத்து மறுபடியும் பிரச்னை தொடங்கியது.

சிம்புவும் நயன்தாராவும் பிரிந்ததற்கு எனக்குத்தெரிந்து ஒரு வி‌ஷயம் தான் முக்கியமான காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன் என கூறினார்.

திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோசியர் ஒருவரை நானும் சிம்பு தரப்பில் ஒருவரும் சென்று சந்தித்தோம். அப்போது சிம்பு, நயன்தாரா இருவரின் ஜாதகங்களைப் பார்த்த அந்த ஜோசியர் ´நயன்தாராவுக்குத் திருமணம் நடைபெற்றால் அவர் தெருவுக்குத்தான் வர வேண்டிய நிலை இருக்கிறது. 

அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் முதல் அமைச்சர் ஆகக்கூடிய வாய்ப்பு கூட இருக்கிறது என கூறினார். இதுதான் அவர்கள் பிரிந்ததற்கான காரணமாக இருக்கும் எனக் கருதுகிறேன் என கூறினார்.