தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலக காரணம் இதுதானா.? ரசிகர்கள் அதிர்ச்சி.!?reason-for-dulqer-salman-quit-thug-life-movie

மலையாளத்தில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் துல்கர் சல்மான். இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தனது நடிப்பு திறமையின் மூலம் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். தனது நடிப்பு திறமையால் தனக்கென தனி இடத்தை தமிழ் திரைத்துறையில் நிலைநாட்டியவர் துல்கர் சல்மான்.

kamal

மேலும் துல்கர் சல்மானுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், தற்போது தமிழில் சுதா கோங்கிரா இயக்கத்தில் ஒரு படத்திலும், மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது போன்ற நிலையில் தற்போது தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகிவிட்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கமலஹாசன் படம் என்றாலே பலரும் நடிக்க ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் துல்கர் சல்மான் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

kamal

இதனை அடுத்து துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பலமொழிகளில் தொடர்ந்து பல திரைப்படங்கள் அதிகமாக கமிட்டாகி விட்டதால் ஒரு சில திரைப்படங்களில் இருந்து விலகுவதாகவும், அதில் தக் லைஃப் படத்திற்கு தேதி ஒதுக்க முடியவில்லை என்றும் துல்கர் சல்மான் தரப்பில் கூறியுள்ளனர்.