சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு! வனிதா வெளியேற்றப்பட்ட இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்!

Summary:

Reason behinds vanitha elimination from bigg boss

பிக்பாஸ் சீசன் மூன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசனே தொகுத்து வழங்கிவருகிறார். 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இரண்டு பிரபலங்கள் வெளியேற்றப்பட்டு தற்போது 14 பேர் மட்டுமே உள்ளனர்.

முதல் வாரம் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வெளியற்றப்பட்ட நிலையில் கடந்த வாரம் வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். சீசன் மூன்று முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் சண்டை போடுவது, சத்தம் போடுவது என விஜய் டிவியின் TRP யை எகிறவைத்தார் வனிதா.

Image result for bigg boss vanitha

இதனால் நிச்சயம் வனிதா வெளியேற்றப்படமாட்டார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுப்பப்பட்டார். இந்நிலையில் வனிதா வெளியேற மக்கள் போட்ட குறைவான வாக்குகள் ஒரு காரணமாக இருந்தாலும், வனிதா மீதான போலீஸ் விசாரணைக்காகவே அவர் வெளியேற்றப்பட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை பிக்பாஸ் வீட்டிற்குள் போலீஸ் வந்து வனிதாவை விசாரணை செய்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட விசாரணைக்காகவே வனிதாவை வெளியே அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement