சினிமா

விஷ்ணு விஷாலின் ராட்சசன் படைத்த பெரும் சாதனை! செம உற்சாகத்தில் படக்குழுவினர்! குவியும் வாழ்த்துக்கள்!

Summary:

Ratsasan movie got first rank in IMDB

2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி வெற்ற திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. மேலும் பல மொழிகளிலும் ரீமேக் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

 இந்த நிலையில் தற்போது ராட்சசன் திரைப்படம்  ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. மேலும் இரண்டாம் இடத்தில் விக்ரம் வேதா மற்றும் 3-ம் இடத்தில் நாயகன் திரைப்படமும் உள்ளன. இந்த தகவலை படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதனை  தொடர்ந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement