சினிமா

இதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்.! சீரியலில் இருந்து விலகிய பிறகும் நடிகை ரட்சிதா செய்த காரியம்! பாராட்டும் ரசிகர்கள்!!

Summary:

இதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்.! சீரியலில் இருந்து விலகிய பிறகும் நடிகை ரட்சிதா செய்த காரியம்! பாராட்டும் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ரட்சிதா. அதனை தொடர்ந்து அவர் சரவணன் மீனாட்சி தொடரில் பல சீசன்களிலும் மீனாட்சியாக நடித்தார். மேலும் இந்த சீரியலின் மூலம் அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

பின்னர் ரட்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்தார். இதில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென ரட்சிதா அந்த தொடரிலிருந்து விலகினார். மேலும் தொடரில் தான் மதிப்பற்றவளாக இருப்பதாக உணர்ந்து அதில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் விரைவில் முடிவடைய உள்ளதாம். இதன் நிறைவு நாளில் சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதில் ராஜு மற்றும் தொடரில் இருந்து பாதியிலேயே விலகிய ரட்சிதாவும் கலந்து கொண்டுள்ளனர். 

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர் ‘முடிவு ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்பார்கள். எனவே இது முழு அணிக்கும் ஒரு அழகான தொடக்கமாக இருக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார். அவரது பெருந்தன்மையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Advertisement