ப்ளீஸ்.. இதை மாதிரி செய்யாதீங்க! கஷ்டமா இருக்கு! கெஞ்சி கேட்டு நடிகை ராஷ்மிகா விடுத்த வேண்டுகோள்!

ப்ளீஸ்.. இதை மாதிரி செய்யாதீங்க! கஷ்டமா இருக்கு! கெஞ்சி கேட்டு நடிகை ராஷ்மிகா விடுத்த வேண்டுகோள்!


rashmika request to fans that dont come to her home

கன்னட சினிமாவில் கிரிக்பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமான அவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்தநிலையில் ராஷ்மிகாவின் தீவிர ரசிகரான தெலுங்கானாவை சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்பவர் ராஷ்மிகாவை பார்ப்பதற்காக ராஷ்மிகாவின் இல்லம் இருக்கும் கர்நாடகாவின் குடகு பகுதி வரை 900 கிலோ மீட்டர் பயணித்துள்ளார்.  அவர் செல்லும் வழியில் மடக்கி பிடித்த காவல்துறையினர் ராஷ்மிகா படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார் எனவும், ஊரடங்கு அமலில் உள்ளதால் அங்கு செல்ல முடியாது எனவும் கூறியுள்ளனர். இதனால் அந்த ரசிகர் ஏமாற்றத்துடன் திரும்பிப் போனார்.

இது குறித்து அறிந்த ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பர்களே, உங்களில் ஒருவர் நீண்ட தூரம் பயணித்து என்னைப் பார்ப்பதற்காக வீட்டிற்குச் சென்றார் என கேள்விபட்டேன். தயவு செய்து அப்படி எதுவும் செய்ய வேண்டாம். இந்த செயல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நிச்சயம் ஒரு நாள், நான் உங்களை சந்திப்பேன். அதுவரை உங்கள் அன்பை இணையத்தில் காட்டுங்கள். நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என கூறியுள்ளார்.