"புஷ்பா திரைப்படத்தில் நான் நடித்திருக்க வேண்டும்" என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் சர்ச்சையான பேச்சு.. அதிரடியாக பதிலளித்த ராஷ்மிகா மந்தானா.?

"புஷ்பா திரைப்படத்தில் நான் நடித்திருக்க வேண்டும்" என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் சர்ச்சையான பேச்சு.. அதிரடியாக பதிலளித்த ராஷ்மிகா மந்தானா.?


Rashmika posted reply about aiswarya rajesh

தமிழ் சினிமாவில் சமீபத்தில்   ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  'ஃபர்கானா' திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தை குறித்த சர்ச்சை உருவாகி தற்போது தான் ஓய்ந்த நிலையில் இருக்கிறது.

rashmika

இது போன்ற நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ்யின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. இதன்படி 'பர்ஹானா' திரைப்படத்தை தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான  ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த நிகழ்ச்சியில் "எனக்கு தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு மிகவும் பிடிக்கும். தெலுங்கில் ஒரு சில படங்களில் தான் நடித்திருக்கிறேன். மேலும் 'புஷ்பா' திரைப்படத்தில் நான் நடித்திருந்தால் ரஷ்மிகாவை விட மிகச் சிறப்பாக நடித்திருப்பேன் என்று சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசிய பின் இதற்கு விளக்கமும் தந்திருக்கிறார்.

rashmika

இதனையடுத்து தற்போது ராஷ்மிகா, ஐஸ்வர்யா ராஜேஷிற்கு பதில் அளித்திருக்கிறார். அப்பதிவில் "ஹாய் லவ் இப்போதுதான் பார்த்தேன் நீங்கள் எந்த அர்த்தத்தில் அதனை கூறி இருக்கிறீர்கள் என்று எனக்கு புரிந்தது இதற்கு மேல் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை உங்கள் பருகானா திரைப்படத்திற்காக என்னுடைய வாழ்த்துக்கள்" என்று பெருமிதமாக பதிலளித்தது நெட்டிசன்கள் மத்தியில் ராஷ்மிகாவின் மீதான மரியாதையை அதிகப்படுத்தி இருக்கிறது.