நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து! சென்னையில் பரபரப்பு!
"அந்த இயக்குனரை தான் நம்புவேன்" ராஷ்மிகா மந்தானாவின் பரபரப்பான பேட்டி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து நேஷனல் கிரஷ் எனும் பெயர் பெற்று ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ராஷ்மிகாவின் ஏ ஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோ இணையதளத்தில் பரவியது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இந்த சர்ச்சை தற்போது மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருகிறது. இதனை அடுத்து ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சினிமா வாழ்க்கையை குறித்து பேசி இருக்கிறார்.

அவர் கூறியதாவது, "நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டால் முழுமையாக அந்த இயக்குனரை மட்டுமே நம்புவேன். படத்தில் நடிப்பதற்கு முன்பாக கதையை நன்றாக கேட்டுக் கொள்வேன். இவ்வாறு தான் படத்தை தேர்வு செய்து நடித்து வருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.