"என்ன மன்னிச்சுடுங்க" - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா மந்தனா..! இதுதான் காரணமா?.!  rashmika-mantha-said-sorry

கோலிவுட் மற்றும் டோலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் "கீதா கோவிந்தம்" படத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் "வாரிசு" படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த படங்களின் பிரமோஷன் சென்னையில் நடந்த போது அதில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தானா, அதன்பின் தெலுங்கில் நடித்த சீதாராமன் மற்றும் புஷ்பா போன்ற படங்களின் பிரமோஷனில் கலந்து கொள்ளவில்லை.

Rashmika mandhana

இதன் காரணமாக சமூகவலைத்தளத்தில் தெலுங்கு பட பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது எதற்காக கலந்து கொள்ளவில்லை? என்ற ஒரு ரசிகர் அவரிடம் கேட்க, 'பல கமிட்மெண்டுகள் இருந்ததால் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்று கூறினார்.

மேலும் 'aஅதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருவதாகவும், இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு என சென்னையில் நடக்கும் எனது படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்வேன். நான் சொல்வதை நம்புங்கள்' என்று பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.