ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட நடிகை ராஷ்மிகா மந்தனா கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ....? இத்தனை கோடியா....

ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட நடிகை ராஷ்மிகா மந்தனா கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ....? இத்தனை கோடியா....


rashmika-mandhana-2-cr-salary-for-new-song

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . மேலும் அப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் அவர் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தார்.

மேலும் சமீபத்தில் ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளிவந்து பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ராஷ்மிகாவிற்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. புஷ்பா பட வெற்றிக்கு பிறகு தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம்  வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் தற்போது அவர் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட கேட்ட சம்பளம் திரையுலகில் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

அர்ஜுன் ரெட்டி பட புகழ் இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்க உள்ள அனிமல் என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆட ராஷ்மிகா மந்தனா  2 கோடி ருபாய் சம்பளமாக கேட்டிருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது. மேலும் புஷ்பா படத்தில் உள்ள ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தா 5 கோடி சம்பளம் வாங்கினார் என்பது  குறிப்பிடத்தக்கது.