தளபதி 66; முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேரப்போவது இந்த நடிகையா!! செம ஜாக்பாட்தான்.!

தளபதி 66; முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேரப்போவது இந்த நடிகையா!! செம ஜாக்பாட்தான்.!


rashmika-mandanna-team-up-with-vijay-in-thalapathi-66

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படம் அடுத்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் பிரபல இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66வது படத்தில் நடிக்க உள்ளார். வம்சி இதற்கு முன்பு தமிழில் தோழா, மகரிஷி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.

vijay

தளபதி 66 படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இதில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த நிலையில் தளபதி 66வது படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.