அதுக்கு ஒரே வழி இதுதான்! அப்படியே இருங்க! நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதை பார்த்தீர்களா!! தீயாய் பரவும் வீடியோ!! rashmika mandanna corono awarness video

சீனாவில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. பின்னர் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மேலும் நடிகர், நடிகைகளும்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மக்களுக்கு நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து, பின்னர் தமிழில் களமிறங்கி முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ரஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், இந்த கொரோனா காலத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் பாசிட்டிவாக எண்ணங்களைப் பரப்ப வேண்டும். இந்த கஷ்டம் விரைவில் முடிவுக்கு வரும். இந்தக் கொரோனா பரவல் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு நமக்கு சவாலாக உள்ளது. இந்த போரை வெல்ல ஒரே வழி நாம் பாசிட்டிவான எண்ணங்களுடன் இருப்பதுதான். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.