தளபதி-63 படத்தில் நானா கதாநாயகி? ட்விட்டரில் விளக்கம் அளித்த பிரபல நடிகை!rashmika-mandanna-casting-in-thalapathi-63

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சர்க்கார் திரைப்படம். இதை தொடர்ந்து தளபதி 63 படத்தில் இயக்குனர் அட்லீயுடன் இணைகிறார் தளபதி விஜய். என்ற்கனவே தெறி, மெர்சல் என வெற்றி படங்களை குடுத்த இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைகிறது.

இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடி யார் என படக்குழு தீவிரமாக தேர்வுசெய்து வருகிறதாம். முதலில் தோணி பட நடிகை என செய்திகள் வந்தன, பின்னர் சமந்தா, நயன்தாரா, ரகுல் ப்ரீத் சிங் என ஆளுக்கு ஒரு பெயர் சொல்ல யார்தான்ப்பா கதாநாயகி என கடுப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

rashmika mandanna

இந்நிலையில் தளபதி-63 இல் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் சென்சேஷன் ஆன பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தான் விஜய் 63 ஹீரோயின் என தகவல் பரவியது.

அதற்கு பதில் அளித்துள்ள நடிகை, "Dai..don’t give me expectations da." என கூறியுள்ளார். இதனால் அவர் படத்தில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீர்கள் என்பதை தான் அவர் இப்படி கூறியுள்ளார்.