அடேங்கப்பா!! அரைமணி நேரத்திற்கு இவ்வளவா?? ரேட்டை கேட்டு ஆடிப்போன திரையுலகம்..

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆந்திர பகுதியில் நடக்கும் செம்மர கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதை தொடர்பாக உருவாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் புஷ்பா.
இப்படம் இந்தியளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படம் 2 பாகமாக வெளியிடப்படவுள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் முதல் பாக வெற்றியால் அதிரடியாக சம்பளத்தை நடிகை ரஷ்மிகா மந்தனா உயர்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பல படங்களில் கமிட்டாகி வரும் நடிகை ரஷ்மிகா ஒரு படத்திற்கு அரை மணி நேரம் நடிப்பதற்கு மட்டும் ரூ. 1 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளாராம். இதைக்கேட்டு தயாரிப்பாளர் அனைவருமே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரை மணி நேரத்திற்கே இவ்வளவு சம்பளம் என்றால் முழு படம் நடித்தால் எவ்வளவு கேட்பாரோ என அதிர்ச்சியில் உள்ளனராம்.