மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
திடீரென ஓய்வு குறித்து பேசிய நடிகை ராஷ்மிகா.! ஏன்? என்ன ஆச்சு? ரசிகர்கள் அதிர்ச்சி!!

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அவர் தெலுங்கில் கீதா கோவிந்தம், மை டியர் காம்ரேட் போன்ற படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார். மேலும் அவர் தமிழில் சுல்தான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அவர் பான் இந்தியா படமான புஷ்பா, விஜய்யுடன் வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருகிறார்.மேலும் நடிகை ராஷ்மிகா பாலிவுட்டில் அனிமல் என்ற படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் அண்மையில் அவர் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராஷ்மிகா மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் சாவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவர் சம்பாஜியின் மனைவியான மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: விஜய்யின் கடைசி படமான தளபதி 69.! டைட்டில் இதுதானா?? வெறித்தனமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் காலில் அடிபட்டு நடக்கமுடியாத நிலையில் ராஷ்மிகா கலந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது பேசிய அவர், என் வாழ்க்கையில் இது போன்ற படத்தில் நடிக்கதான் விரும்பி காத்திருந்தேன். இயக்குநர் லக்ஷ்மண் சாரிடம் பேசியபோது கூட இந்த படத்துடன் நான் ஓய்வு பெற்றாலும் ரொம்ப சந்தோஷம்தான் என கூறினேன். படத்தில் விக்கி பார்ப்பதற்கு கடவுள் போல் இருக்கிறார் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!