விஜய்யின் கடைசி படமான தளபதி 69.! டைட்டில் இதுதானா?? வெறித்தனமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!



thalapathy-69-movie-title-viral

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், கோட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். தற்போது தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக பாபி தியோல் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் பிரகாஷ்ராஜ்,  ப்ரியாமணி, மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற  கட்சியை தொடங்கி, அரசியலில் மும்முரமாக ஈடுபட உள்ள நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலகுகிறார். 

Thalapathi 69

இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் இதன் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த நிலையில் தற்போது தளபதி 69 படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது படத்திற்கு 'நாளைய தீர்ப்பு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!

இதையும் படிங்க: விஜயின் 69 திரைப்படத்தின் தலைப்பு; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!