மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அருண். அவர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி, பரபரப்பான போட்டியாளராக இருந்தார்.
நடிகர் அருணும், விஜய் டிவி சீரியல் நடிகையும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான அர்ச்சனாவும் காதலிப்பதாக முன்னரே இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில், அருண் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது உள்ளே வந்த அர்ச்சனா தங்களது காதலை அறிவித்தனர்.
இந்நிலையில் அவர்களது திருமணம் குறித்த தகவல்கள் பரவி வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அருண், எனக்கும் அர்ச்சனாவுக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து இருவரது வீட்டிலும் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளனர். இந்த வருடத்துக்குள் எங்களது திருமணத்தை நடத்த திட்டமிட்டு வருகிறோம்" என கூறியுள்ளார். இந்த நிலையில் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலருக்காக ஓட்டு சேகரிக்கும் அர்ச்சனா?.. நேரம் பார்த்து நெருக்கமான வீடியோ வைரல்.! நெட்டிசன்ஸ் கேள்வி.!!
இதையும் படிங்க: விஜயின் 69 திரைப்படத்தின் தலைப்பு; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!