BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கர்நாடகாவில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.. இயக்குனர் ரஞ்சித் அறிவிப்பு.!
மார்கழி மாதம் என்றாலே கர்நாடக சங்கீத கச்சேரிகள் என்றிருந்தை மாற்றி மக்களை இசை பாடல்களுக்கான கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் இயக்குனர் பா ரஞ்சித். இவரது நீளம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கே ஜி எஃப் மற்றும் கர்நாடகாவின் ஓரிரு பகுதிகளில் நடக்க உள்ளதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதன்படி கேஜிஎப் பகுதியில் டிசம்பர் 23ஆம் தேதியும், ஓசூரில் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலில் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.