சினிமா

நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்டுள்ள பிக்பாஸ் பிரபலம்! அதுவும் வித்தியாசமாக யாருடன் பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக விளங்க

தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக விளங்கிய விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலை உயிரிழந்தார். இவரது இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் விவேக் சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். மேலும் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாப்பதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். நடிகர் விவேக்கிற்கு ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பது கனவு. இந்நிலையில் அவரது மறைவிற்கு பிறகு அவரது கனவை நனவாக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளும், ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக்கின் நினைவாக பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ரம்யா பாண்டியன், திருவள்ளூர்  ஆயுத படை  மைதானத்தில்  மாவட்ட SP. அரவிந்தன் மற்றும் ஆயுத பூஜை காவலர்களுடன் விவேக்கின் வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement