சினிமா

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இரு முக்கிய நபர்கள்! அப்படி நடந்தா நீ காரணம் இல்ல.. அவர்கள் கூறியதை கேட்டு ஷாக்கான ரம்யா!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளிற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 , 85 நாட்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்தவாரம் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  Freeze டாஸ்க் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதலில் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனது அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் இருந்த ஷிவானியை அவரது அம்மா கடுமையாக திட்டினார்.. இதனை எதிர்பாராத ஷிவானி கதறி அழுதார். அவரை தொடர்ந்து பாலாவின் நண்பர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அனைவரிடமும் ஜாலியாக பேசி சென்றார். 

அதனை தொடர்ந்து இன்று சர்ப்ரைஸாக ரம்யா பாண்டியனின் அம்மா மற்றும் தம்பி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். அவர்களை கண்டதும் ரம்யா செம குஷியானார். பிறகு போட்டியாளர்களிடம் பேசிய ரம்யாபாண்டியனின் அம்மா, அவ அழற டைப் எல்லாம் கிடையாது என சொல்ல அதற்கு சோமு, அவ அழ வைக்குற டைப் என கிண்டலாக கூறுகிறார். பின்னர் ரம்யாவிடம் தனியாக பேசிய ரம்யாவின் தம்பி இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற்று நீ வெளியே வந்தா காரணம் நீ கிடையாது என எச்சரிக்கிறார். அதை கேட்டதும் ரம்யா நான் வெளியில் வரும் நிலைமை இருக்கா என ஷாக்காகிறார். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.


Advertisement