மீண்டும் மொட்டை மாடி போட்டோஷூட்! ரசிகர்களை கிறங்கடித்த ரம்யா பாண்டியன்! லைக்குகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!!

மீண்டும் மொட்டை மாடி போட்டோஷூட்! ரசிகர்களை கிறங்கடித்த ரம்யா பாண்டியன்! லைக்குகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!!


ramya pandian latest photoshoot viral

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் அதன்பிறகு ஆண் தேவதை படம் மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மொட்டைமாடியில் புடவையில் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்திருந்தார். அது வைரலாகி அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். பின்னர் அவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. மேலும்  தற்போது பட வாய்ப்புகள் தேடி வருகிறது.

 ரம்யா பாண்டியன் அடுத்ததாக  சூர்யாவின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் ரம்யா பாண்டியன் மொட்டைமாடியில் மாடர்னாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை அவர் இணையத்தில்  வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.