சினிமா Covid-19

பிரபல நடிகர் ராம்சரன் குறித்து வெளிவந்த தகவல்.! அதிர்ச்சியான ரசிகர்கள்.!

Summary:

தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் கூட, தற்போது வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக வெளியாகும் தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில், தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement