நாங்க எல்லோரும் நல்லாருக்கோம்.. ரொம்ப நன்றி.! மனம் உருகி நடிகை ரம்பா வெளியிட்ட வீடியோ!!

நாங்க எல்லோரும் நல்லாருக்கோம்.. ரொம்ப நன்றி.! மனம் உருகி நடிகை ரம்பா வெளியிட்ட வீடியோ!!


rambha-thank-to-all-who-pray-for-them-video-viral

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்டு முன்னணி ஹீரோயினாக, தொடையழகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினி, கார்த்திக், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ரம்பா கடந்த 2010ஆம் ஆண்டு  இந்திரகுமார் பத்மநாபன் என்ற கனடாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ரம்பா அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வார்.

இந்த நிலையில் அண்மையில் ரம்பா தனது மகள்களை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது அவர்களது கார் மீது மற்றொரு கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவரது இளைய மகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து புகைப்படங்களை வெளியிட்டு தனது மகளுக்காக பிரார்த்தனை செய்யுமாறு ரம்பா கேட்டிருந்தார். மேலும் அவர்கள் விரைவில் குணமடைய திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வந்தனர். 

இந்த நிலையில் நடிகை ரம்பா தற்போது தான் மற்றும் தனது பிள்ளைகள் நன்றாக இருப்பதாகவும் எங்களுக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள், நண்பர்கள், குடும்ப உறவினர்கள் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என உருக்கமாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.