சினிமா

குட்டி ரம்பா..! ரம்பாவை அப்படியே செராக்ஸ் எடுத்தது போல் இருக்கும் அவரது மகள்..! ரம்பாவோட பொண்ணா இது..?

Summary:

Ramba daughter look like actress ramba photo goes viral

ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. 90 கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயின்களில் இவரும் ஒருவர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தார் நடிகை ரம்பா. நவரச நாயகன் கார்த்திக்குடன் இவர் இணைந்து நடித்த  உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக உள்ளிட்ட படங்கள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த ரம்பா  கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், தனது மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரம்பா.

அந்த புகைப்படத்தில், ரம்பாவின் மகள் கிட்டத்தட்ட அவரைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.


Advertisement