சினிமா

அழகான குழந்தையை பெற்றெடுத்த இளைஞர்களின் கனவுக்கன்னி, வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்.! யாருக்கு தெரியுமா ?

Summary:

அழகான குழந்தையை பெற்றெடுத்த இளைஞர்களின் கனவுக்கன்னி, வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்.! யாருக்கு தெரியுமா ?

தமிழ்,தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்பா . 

இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்ற கனடா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு லாண்யா, சாஷா என இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

      ramba க்கான பட முடிவு

அதன் பின் நடிகை ரம்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை என்று தன் கணவரை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் கூறியிருந்தார்.

இதையடுத்து கணவன் - மனைவி இருவருக்குமிடையேயான பிரச்னை பேசித் தீர்க்கபட்டு, பின்னர் ரம்பா தன் கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ramba baby shower க்கான பட முடிவு

இந்நிலையில் கடந்த மே மாதம் ரம்பா தன்னுடைய 3-வது குழந்தைக்காக காத்திருப்பதாக தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கூறியிருந்தார். மேலும், ரம்பாவின் மூன்றாவது வளைகாப்பு நிகழ்ச்சி கனடாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது ரம்பாவிற்கு கடந்த 23ம் தேதி டொரண்டோ மவுண்ட் சினாய் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் ரம்பா மற்றும் அவரது கணவர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement