100 கோடி கொடுத்தாலும் அப்படிப்பட்ட படத்தில் நடிக்கமாட்டேன்.! மீண்டும் ஹீரோவான நடிகர் ராமராஜன் கூறியதை பார்த்தீங்களா!!



ramarajan-sppech-in-samanian-movie-teaser-released

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90ஸ் காலகட்டங்களில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்த முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளி தந்தது. அதிலும் அவர் நடித்த இவர் எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன் படங்கள் இன்றும் பாராட்டப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு அம்மன் கோயில் வாசலிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்த அவர் நம்ம ஊரு ராசா, கோபுர தீபம், விவசாயி மகன், சீறிவரும் காளை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மேதை படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் ராமராஜன் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக சாமானியன் படத்தின் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

Ramarajan

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவாகும் இதனை மதியழகன் தயாரிக்க ஆர்.ராகேஷ் இயக்கியுள்ளார். ராமராஜனின் 45 வது படமான இதன் டீசர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த விழாவில் பேசிய ராமராஜன்  கூறியதாவது, இதுவரை எத்தனையோ கதைகளை கேட்டுவிட்டேன். எதுவுமே பிடிக்கவில்லை. 100 கோடி கொடுத்தாலும் தாறுமாறான கதைகளில் நடிக்கும் தரம் கெட்ட வர்க்கத்தில் நான் பிறக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழி வந்தவன் நான். இதுவரை 45 படங்களில் நடித்துள்ளேன். 50 படங்கள் வரை ஹீரோவாகவே நடிப்பேன் என கூறியுள்ளார்.