சினிமா

அடேங்கப்பா..! ராமராஜன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது எவ்வளவு சம்பளம் வாங்கினாராம் தெரியுமா? ரஜினி, கமலைவிட அதிகம்.!

Summary:

Ramarajan movie salary details

தமிழ் சினிமாவில் நடித்து பலவருடங்கள் ஆகிவிட்டாலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத நடிகர்களில் ஒருவர் நடிகர் ராமாரஜன்.  தியேட்டரில் வேலைப்பார்த்த இவர் பின் நாளில் ரஜினி, கமலுக்கு போட்டியாக வந்து தமிழ் சினிமாவை தனது கட்டுக்குள் கொண்டுவந்தவர்.

இவர் நடித்த கரக்காட்டக்காரன் படத்தை யாராலும் மறக்க முடியாது. பட்டி தொட்டியெங்கும் வருட கணக்கில் ஓடிய இந்த படம் அந்த காலக்கட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களையே அசர வைத்த வசூல் சாதனை படைத்த படம்.

மேலும், முன்னணி நடிகர்களே இவரது படத்தை பார்த்து மிரளும் அளவிற்கு பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். முன்னணி நடிகர்களே அந்த காலத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்கியபோது ராமராஜன் அப்போதே 1 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.


Advertisement