சினிமா

கதை ரெடி.. மீண்டும் இயக்குனராகும் ராமராஜன்.. ஓகே சொல்வாரா விஜய் சேதுபதி!

Summary:

ramarajan is ready with story for vijay sethupathi

நடிகர் மற்றும் இயக்குனருமான ராமராஜன் கதை தாயராக இருப்பதாகவும் விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்க ரெடி எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் மறைந்த பிரபல இயக்குநர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராமராஜன். பின்னர் மருதாணி, சோலை புஷ்பங்கள் போன்ற படங்களை இயக்கினார். அதன் பிறகு நடிகராக களம் இறங்கிய ராமராஜன் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தார்.

மதம் மாறிய ராமராஜன்? ஆண்டனி ...

பின்னர் இடையில் அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊர் ராசா போன்ற படங்களையும் இயக்கினார். அரசியலில் களமிறங்கி நட்சத்திர பேச்சாளராக விளங்கிய ராமராஜன் கடைசியாக 2012-ம் ஆண்டு மேதை என்ற படத்தில் நடித்தார்.

அதன் பிறகு சினிமாவிற்கு நீண்ட இடைவெளிவிட்டிருந்த ராமராஜன் தற்போது மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைக்கவுள்ளார். இப்பொது நடிகராக இல்லாமல் இயக்குனராக களமிறங்குகிறார். அதிலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஏற்றாற்போல் கதை இருப்பதாகவும் விரைவில் அவரை அணுக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement