ஓமைக்ரான் அச்சுறுத்தல்! தவறாமல் முதலில் இதை செய்யுங்க! ராமதாஸ் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

ஓமைக்ரான் அச்சுறுத்தல்! தவறாமல் முதலில் இதை செய்யுங்க! ராமதாஸ் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!



ramadoss-tweet-about-vaccine-for-omicron-virus

கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போதுவரை பெருமளவில் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் இன்றும் கொரோனோ குறித்த அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் தற்போது இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓமைக்ரான் அச்சுறுத்தலைத் தடுக்க அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான மக்களின் ஆர்வம் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வாரத்திற்கு வாரம் குறைந்து வருவது ஆரோக்கியமான அடையாளம் அல்ல.

ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடம் ஐயங்களும், அச்சங்களும் இருந்தால் அதை அரசு போக்க வேண்டும்.

பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதைப் போன்று, அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.