சினிமா

அச்சோ.. தளபதி 66 படத்திலிருந்து விலகும் முக்கிய பிரபலம்! யார்? எதனால் தெரியுமா?? வெளிவந்த தகவல்!!

Summary:

தளபதி 66 படத்திலிருந்து விலகும் முக்கிய பிரபலம்! யார்? எதனால் தெரியுமா??

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவர் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது. தளபதி 66 படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளார். மேலும் வசன எழுத்தாளராக ராஜு முருகன் பணியாற்ற உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் கார்த்தி நடிக்கும் படத்தை  இயக்கவிருப்பதால் தளபதி 66 படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜூ முருகன் ஜிப்ஸி, ஜோக்கர், குக்கூ போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி ஜெய் பீம் படத்தில் “தல கோதும் பூங்காத்து” என்ற பாடலை  எழுதியுள்ளார்.மேலும் வம்சியின் தோழா படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement