சினிமா

சர்க்கார் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்தின் அதிரடி டுவிட்!.

Summary:

rajinikanth talk about sarkar in twitter


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார்.

இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்திருந்தார். 

மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சர்க்காருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சர்க்கார் படத்திற்கான ஆதரவை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 

சர்க்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். 

இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement