பல ஆண்டுக்கால என் ஈகோவை உடைத்த அந்த தருணம்! கை அசைத்தும் கூட யாரும் என்னை கண்டுக்கல..... ரஜினிகாந்த் பகிர்ந்த நெஞ்சை உலுக்கும் உண்மை சம்பவம்.!!!



rajinikanth-spiritual-experience-art-of-living-event

பெங்களூருவில் நடைபெற்ற ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ அமைப்பின் 45-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்த ஆன்மீக அனுபவம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ஆசிரமத்தில் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத ஒரு தருணம் தனது பல ஆண்டுகால ஈகோவை உடைத்ததாக அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் முன்னிலையில் பேசிய ரஜினிகாந்த், பல ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்திற்குச் சென்ற அனுபவத்தை நகைச்சுவையுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: இப்படி சொல்லுவாருன்னு எதிர்பார்கல... ஆசையாக நடிக்க போனேன்! ஆனால் கையில் சோப்பை கொடுத்து கழுவிட்டு வான்னு சொல்லிட்டாரு.... இயக்குனர் பாலா குறித்து நடிகை அபிதா போட்டுடைத்த உண்மை!!!

2 நாட்களுக்கு சென்றவர்... 15 நாட்கள் தங்கிய ரஜினி

அப்போது ஆசிரமத்தின் அமைதியான சூழலும், இயற்கை நிறைந்த அந்த இடமும் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரஜினிகாந்த் கூறினார். ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தங்க திட்டமிட்டிருந்தாலும், அந்த அனுபவம் காரணமாக 15 நாட்கள் அங்கேயே தங்கியதாக தெரிவித்தார்.

அந்த நாட்களில் கிடைத்த அமைதியும், ஆன்மீக உணர்வும் தனது வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள்” என தயங்கிய ரஜினி

ஒருநாள் ஆசிரமத்தை சுற்றிப் பார்க்க குருஜி அழைத்தபோது, “நான் வெளியே வந்தால் ரசிகர்கள் கூட்டமாக வந்து விடுவார்கள். அது உங்களுக்கு சிரமமாக இருக்கும்” என்று தன்னுடைய தயக்கத்தை தெரிவித்ததாக ரஜினிகாந்த் கூறினார்.

ஆனால் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று குருஜி உறுதியளித்த பிறகு தான் வெளியே சென்றதாக அவர் நினைவுகூர்ந்தார்.

யாரும் திரும்பிப் பார்க்காத தருணம்

ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கானோர் இருந்தபோதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரை பார்த்தும் கூட யாரும் தன்னிடம் வந்து பேசவில்லை என ரஜினிகாந்த் சிரித்தபடி கூறினார். ஒருவராவது ஆட்டோகிராஃப் அல்லது புகைப்படம் கேட்பார்கள் என நினைத்திருந்ததாகவும், ஆனால் யாரும் தன்னை கவனிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தானாக முன்வந்து கை அசைத்தும் கூட எவரும் திரும்பிப் பார்க்காத அந்த தருணம் தனது மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

“பல ஆண்டுகளாக இருந்த என் ஈகோ அங்கே உடைந்தது. புகழும், நட்சத்திர அந்தஸ்தும் ஆன்மீகத்தின் முன் எவ்வளவு சிறியது என்பதை அப்போது உணர்ந்தேன்” என்று ஆர்ட் ஆஃப் லிவிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது அரங்கில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

 

இதையும் படிங்க: வாராஹி அம்மன் தரிசனம்! வாழ்வில் மறக்க முடியாது.... ஆன்மீக ரகசியத்தை உடைத்த ஸ்ருதி ஹாசன்! என் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை அதுதான்...!!!