#Breaking: ரசிகர்களுக்கு காட்சிதந்த நடிகர் ரஜினிகாந்த்.. விண்ணைப்பிளந்த தலைவா கோஷம்.. கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்..!

#Breaking: ரசிகர்களுக்கு காட்சிதந்த நடிகர் ரஜினிகாந்த்.. விண்ணைப்பிளந்த தலைவா கோஷம்.. கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்..!


Rajinikanth Meets Fans in House Says New year Wish 2023

புத்தாண்டுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். இவர் பண்டிகை காலங்களில் தன்னை காணவரும் ரசிகர்களை வீட்டில் இருந்தவாறு கையசைத்து பார்த்து வாழ்த்துக்கள் தெரிவிப்பது வழக்கம். 

rajinikanth

கடந்த டிசம்பர் 12ம் தேதி அவரது பிறந்தநாளில் எப்படியாவது ரஜினிகாந்தை நேரில் பார்க்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் ஊரில் இல்லாததால் ரசிகர்கள் கண்ணீர் விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

rajinikanth

இந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்தின் வீட்டு முன்பு நள்ளிரவு முதலாகவே ரசிகர்கள் ரஜினிகாந்த் வருவார் என காத்திருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரசிகர்கள் முன்பு தோன்றிய ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனால் அவரின் ரசிகர்கள் தலைவா என கோஷமெழுப்பி உற்சாகமடைந்தனர்.