13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
"குறி வச்சா இறை விழணும்" வேட்டையன் டப்பிங் பணியில் ரஜினிகாந்த்.! வைரல் வீடியோ.!
டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராவோ ரமேஷ், அபிராமி உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன் (Vettaiyan).
அனிரூத் இசையில், எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, திருவனந்தபுரம், திருநெல்வேலி உட்பட பல பகுதிகளில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. படம் தீபாவளியை முன்னிட்டு அக்.10, 2024 அன்று ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டப்பிங் பணிகள் தொடக்கம்
இதனால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோ வெளியிட்டுள்ள லைகா நிறுவனம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளில் படம் வெளியாகுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வேட்டையனுக்கு வழிவிட்ட கங்குவா; சூர்யா அதிகாரபூர்வ அறிவிப்பு.. காரணம் இதோ.!
Kuri Vechha… Erai Vizhanum. 🦅 Superstar @rajinikanth at the dubbing session. 🎙️ Watchout VETTAIYAN 🕶️ is on the way. 🔥
— Lyca Productions (@LycaProductions) August 31, 2024
Releasing on October 10th in Tamil, Telugu, Hindi & Kannada!#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/BUDMuC5jeq
இதையும் படிங்க: 38 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி - சத்யராஜ்; கூலி படத்தின் அப்டேட்டால் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.!