38 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி - சத்யராஜ்; கூலி படத்தின் அப்டேட்டால் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழ் திரையுலகில் தொடக்கத்தில் இருந்து இன்று வரை உச்ச நட்சத்திரமாக திகளுபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கடந்த 1986ம் ஆண்டு மிஸ்டர் பாரத் எனப்படும் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் நடிகர் சத்யராஜ் - ரஜினிகாந்த் இணைந்து நடித்து இருந்தனர். அன்றைய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் பாரத் அமைந்தது.
இந்த படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் - சத்யராஜ் கூட்டணி இணைய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. இருவரும் வெவ்வேறு கோணங்களில் தங்களின் திரை வாழ்க்கையை கடந்து, இன்று சத்யராஜ் முக்கிய தோற்றங்களில் நடிக்கும் மூத்த நடிகராக இருக்கிறார்.
38 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரஜினி - சத்யராஜ்
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜுடன் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பட்டப்படிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் - சத்யராஜும் 38 ஆண்டுகளுக்கு பின்னர் கூலி திரைப்படத்தில் ஒன்றாக நடிக்க இருக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் ரிலீஸ் தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இருவரும் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த தகவல் இல்லை எனினும், இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவேறு கொள்கைகள் கொண்ட நடிகர்கள், 38 ஆண்டுகளுக்கு பின் இணையவுள்ளனர்..
கூலி படத்தில் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபத்திரத்தில் நடிக்கிறார்.
Kicked to have #Sathyaraj sir joining the cast of #Coolie as #Rajasekar💥💥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 31, 2024
Welcome on board sir🔥🔥@rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @sunpictures @PraveenRaja_Off pic.twitter.com/zmC6M1fHEu
இதையும் படிங்க: வேட்டையனுக்கு வழிவிட்ட கங்குவா; சூர்யா அதிகாரபூர்வ அறிவிப்பு.. காரணம் இதோ.!