மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
தமன்னாவிற்கு அந்த மாதிரி பொருளை பரிசாக அளித்த ரஜினிகாந்த்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் 80களின் ஆரம்பங்களில் இருந்து நடிக்க தொடங்கிய தற்போது வரை தனது நடிப்பு திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி 'சூப்பர் ஸ்டார்' எனும் பட்டத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
தொடர்ந்துவெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வரும் ரஜினிகாந்த், சமீபத்தில் நடித்து வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் பெரிதும் கை கொடுக்கவில்லை. அண்ணாத்த படத்திற்கு பின் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் ரஜினிகாந்த், திரைக்கதையில் சில மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இதுபோன்ற நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடித்து வருகிறார். இவருக்கு ரஜினிகாந்த் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புத்தகம் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.