சினிமா

பாடும் நிலா.. எழுந்து வா!! எஸ்.பி.பிக்காக கூட்டுப்பிரார்த்தனை! நடிகர் ரஜினி வெளியிட்ட அறிக்கை!

Summary:

Rajini tweet about group prayer for spb

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் அவர்  செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியானது. பின்னர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று மருத்துவ அறிக்கை வெளியானது.

இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு 
திரும்ப வேண்டுமென பிரார்த்தனைகள் மேற்கொண்டு உருக்கமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பாடகர் எஸ்பிபி குணமடைய வேண்டி ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாடும் நிலா எழுந்து வா!! கூட்டுப்பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பியை மீட்டெடுப்போம். 20.08.2020 இன்று மாலை 6 மணிக்கு முதல் 6.05 வரை. கூட்டுப்பிரார்த்தனையில் ரஜினி மக்கள் மன்றத்தினரும் பங்கேற்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement