நா எப்போ அரசியலுக்கு வரேன்னு சொன்னேன்? இனிமேல் அப்படி சொல்லாதீர்கள்! ரஜினியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Rajini talk about politics


Rajini talk about politics


கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற முடிவில் இருப்பதாகவும், முதல்வர் பதவி தனக்கு தேவையில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் நிலைப்பாடு விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த நிலையில், இன்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்தநிலையில், ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் என்றுமே பதவிகளுக்கு ஆசைப்பட்டவன் கிடையாது. நான் 25 வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்வதாகச் சொல்கிறார்கள். நான்  2017 டிசம்பரில்தான் அரசியலுக்கு வருவேன் எனத் தெரிவித்தேன். எனவே அப்படிச் சொல்லாதீர்கள். 

rajini

எனக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. 45 வயதிலேயே முதல்வர் பதவி ஆசை இல்லாதவன் நான். 70 வயதில் ஆசைப்பட்டால் நான் பைத்தியக்காரன். ஆக, இளைஞர் ஒருவரே எனது கட்சியின் முதல்வர் வேட்பாளராக நிற்பார்.

முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறியதை யாருமே ஏற்கவில்லை. நிர்வாகிகள் பலர் இதனை ஏற்காததையே நான் ஏமாற்றம் என் கூறினேன். நீங்கள் முதல்வராக இருக்காவிட்டால் அரசியல் எடுபடாது என பலர் கூறினர். அரசியலில் எம்எல்ஏ, அமைச்சர் ஆகி அழகு பார்ப்பது எனக்கு பிடிக்காது. நான் முதல்வராக வரவேண்டும் என ரசிகர்கள் சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.

சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பல இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இளைஞர்கள் அரசியல் சாக்கடை என்று விலகிவிடக்கூடாது. அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.