"அந்த மாதிரி படத்தில் நடித்த பிறகு வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் அழுதேன்" மனம் திறந்த சதா.!
தலைவர்.. அப்பவே மாஸ்தான்.! இணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டாரின் பள்ளிப்பருவ புகைப்படம்!! இதோ..
தலைவர்.. அப்பவே மாஸ்தான்.! இணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டாரின் பள்ளிப்பருவ புகைப்படம்!! இதோ..

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு தற்போது சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் ரஜினிகாந்த். இவர் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வராகங்கள் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் சில படங்களில் வில்லனாக பின்னர் பைரவி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பல சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஜினி இறுதியாக சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து ரஜினி நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ரஜினியின் பள்ளிப்பருவ புகைப்படம் என ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதில் அவர் கையில் வெற்றிக் கோப்பையுடன் உள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பெருமளவில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் தலைவர் அப்பொழுதே மாஸ்தான் எனவும் கூறி வருகின்றனர்.