ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது! போர்டு வைத்த பெட்டிக்கடைக்காரர்! வைரல் புகைப்படம்!

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது! போர்டு வைத்த பெட்டிக்கடைக்காரர்! வைரல் புகைப்படம்!


Rajini politics entry

ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக பலரும் கூறிவந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், கட்சியின் சின்னம், பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ரஜினி அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகுதான் ரஜினி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருவதாக மக்கள் கருதுகின்றனர்.

மேலும், அடுத்து வர இருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் தான் அவரின் இலக்கு என்றும், அதற்காகத்தான் ரஜினி பொறுமையாக இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். இன்னும் சிலரோ அவர் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டார் என கூறிவருகின்றனர்.

rajini

இந்நிலையில் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது என்று கடைக்காரர் ஒருவர் தனது கடையில் பலகை வைத்திருக்கும் காட்சி ஓன்று டிவிட்டரில் வைரலாகிவருகிறது. ரஜினி நிச்சயம் கட்சி தொடங்க மாட்டார், அரசியலுக்கு வர மாட்டார் என்பதை மனதில் வைத்துதான், எப்பொழுதுமே கடன் கிடையாது என்பதை அந்த நபர் என்ன அழகாக தெரிவித்துவிட்டார் என நெட்டிசன்கள் கலைத்துவருகின்றனர்.