"செல்ஃபீ எடுக்க வந்த ரசிகரைத் தாக்கிய ரஜினி பட நடிகர்!" வைரலாகும் பரபரப்பு வீடியோ.!



Rajini movie actor attack on fans

ஹிந்தி, மராத்தி மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் நானா படேகர். முன்னாள் ராணுவ அதிகாரியான நானா படேகர், தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் திரைக்கதை ஆசிரியராகவும் உள்ளார்.

rajini

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "காலா" திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது நானா படேகர் அனில் சர்மா இயக்கத்தில் "ஜர்னி" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பனாரஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் நானா படேகருடன் செல்ஃபீ எடுக்க வந்துள்ளார்.

rajini

அப்போது நானா படேகர் அந்த இளைஞரை தலையில் அடித்து துரத்தி விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் நானா படேகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.