50வது நாள் ஸ்பெஷல்.! டெக்னீஷியன்களுக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த சர்பிரைஸ் கிப்ட்! வைரலாகும் புகைப்படம்!!

50வது நாள் ஸ்பெஷல்.! டெக்னீஷியன்களுக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த சர்பிரைஸ் கிப்ட்! வைரலாகும் புகைப்படம்!!


rajini-gifted-gold-chain-to-annathe-movie-technicians

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷும், ஹீரோயினாக நயன்தாராவும் நடித்திருந்தனர்.

மேலும் குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த இந்த திரைப்படம், வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஆனாலும் படம் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியுள்ளது. நடிகர் ரஜினியை பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது.

அதனை முன்னிட்டு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்து அவர்களை பாராட்டும் வகையில் தங்கச் செயினை பரிசாக அளித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு முன்னர் ரஜினி இயக்குனர் சிவாவை அவரது வீட்டில் சந்தித்து தங்க செயினை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது