அண்ணாத்த படவேலைகள் முடிஞ்சவுடனே அமெரிக்கா பறக்கும் சூப்பர் ஸ்டார்! ஏன்? எதற்காக? வெளிவந்த தகவல்!!

அண்ணாத்த படவேலைகள் முடிஞ்சவுடனே அமெரிக்கா பறக்கும் சூப்பர் ஸ்டார்! ஏன்? எதற்காக? வெளிவந்த தகவல்!!



rajini-flies-to-america-for-medical-checkup

தமிழ் சினிமாவில் பல மாஸ் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

rajini

மேலும் இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினி சென்னை திரும்புவார் எனவும் அதன் பிறகு டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த  பின் நடிகர் ரஜினிகாந்த்  அமெரிக்கா பறக்கவுள்ளாராம். அதாவது நடிகர் ரஜினி வரும் ஜூன் மாதம் மருத்துவ பரிசோதனைக்காக  அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.