சினிமா

தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! வெளியான புகைப்படங்கள்

Summary:

Rajini celebrated keerthy suresh national award

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படத்தில் சாவித்ரியாகவே மாறிய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை வழங்கி, அவரின் நடிப்பை பாராட்டினார்.

விருது வாங்கியதும் கீர்த்தி சுரேஷ் ஹைதராபாத்தில் நடைபெயறும் #தலைவர்168 படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷிற்கு நேற்று படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


Advertisement