"ரஜினி தான் என்றும் என் முதல் குழந்தை" ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா நெகிழ்ச்சி.!



Rajini brother talk about rajini

'சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்' என்று பாடலே இருக்கிறது. சூப்பர் ஸ்டாரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தற்போது வரை ரஜினிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர்.

rajini

ஆகஸ்ட் 10ல் வெளியான 'ஜெயிலர்' படம் இரண்டு வாரங்களில் 550 கோடி வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியால் ரஜினி மட்டுமின்றி, அவரது அண்ணன் சத்ய நாராயணாவும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில் , யூ ட்யூப்  சேனலுக்கு பேட்டியளித்த சத்ய நாராயணா, ரஜினி குறித்து பேசினார். அதில் அவர், "நாங்கள் நான்கு பேர். முதலில் ஒரு அக்கா, பிறகு நான் , அடுத்து ஒரு தம்பி, கடைசியாக தான் ரஜினி. ரஜினிக்கு 4 வயதாகும்போதே எங்கள் அம்மா இறந்துவிட்டார்.

rajini

பிறகு, அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார். அதன் பிறகு எங்கள் சித்தப்பா தான் ரஜினியை வளர்த்தார். எனக்கு 20 வயதில் திருமணம் நடந்து, 35 வயதில் 5 குழந்தைகள் இருந்தனர். ஆனாலும் ரஜினி தான் என்றும் என் முதல் குழந்தை" இவ்வாறு சத்யா நாராயணா கூறினார்.