ஆதிக்கு ஆப்படித்த சிவகாமி குடும்பத்தினர்.. அடுத்தடுத்து நடக்கபோகும் பரபரப்பு சம்பவங்கள்.. தாறுமாறு டிவிஸ்டுடன் ராஜா ராணி 2 ப்ரோமோ..!   

ஆதிக்கு ஆப்படித்த சிவகாமி குடும்பத்தினர்.. அடுத்தடுத்து நடக்கபோகும் பரபரப்பு சம்பவங்கள்.. தாறுமாறு டிவிஸ்டுடன் ராஜா ராணி 2 ப்ரோமோ..!   


raja-rani-2-serial-latest-promo

கோலிவுட் சின்னதுரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தொலைக்காட்சி விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் மற்றும் நெடுந்தொடர்கள் என அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் ராஜா ராணி 2 சீரியல் முன்பு 5 நாட்கள் ஒளிபரப்பாகிய நிலையில், கடந்த சில வாரங்களாக சனிக்கிழமையன்றும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Raja Rani 2

சில வாரங்களாகவே மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் தற்போது மீண்டும் டிவிஸ்ட் வைத்துள்ளனர். இது குறித்த அடுத்தவார ப்ரோமோவில், ஆதிக்கு புதிதாக பெண் பார்ப்பதாக தெரியவருகிறது. பெண் பார்க்கும் போது அவருக்கு பெண்ணை பிடித்துவிட்டது என குடும்பத்தினர் கூறவே, பெண்ணிடம் இது குறித்து கேட்கும் பொழுது தனியாக பேச வேண்டும் என அவர் கூறுகிறார். 

இதனால் ஆதியும் உள்ளே செல்ல, ஆதியின் காதலி ஜெசி உள்ளே இருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஆதி, நீ எப்படி இங்கே வந்தாய்? இங்கே உனக்கென்ன வேலை? என்று கேட்கிறார். அதற்கு ஜெசி, "என் வயிற்றில் உன் குழந்தை வளர்கிறது. எதுவும் இல்லை எனக் கூறினால், நான் என்ன செய்வது? இதற்கு என்ன அர்த்தம்" என்று கோபத்துடன் கேட்கிறார்.

Raja Rani 2

ஸ்மார்ட்டாக பதில் கூறுவது போல நினைத்த ஆதி, 'நீ கர்ப்பமாக இருந்தால் முதலில் அதை என்னிடம் கூறியிருக்க வேண்டும். நான் சமயம் பார்த்து என் தாயிடம் கூறியிருப்பேன். இனி ஒன்னும் செய்ய முடியாது. இத அபார்ஷன் பண்ணிட்டு வேலையை பாரு' என கூறிவிட்டு கதவைத் திறந்தபோது ஆதிக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதன் பின் என்ன நடக்கும்? ஆதி என்ன செய்வார்? என்பதை அவ்விடத்தில் ட்விஸ்ட்டாக வைத்து ப்ரோமோவை முடித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அடுத்தவார எபிசோடு கலக்கலாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.